Saturday 5 January 2013

நமது வலைதள பயணத்தில்.......

facebookகாலை நாளேடு ஒன்றை பார்த்ததும் அதிர்ட்சிக்குள்ளானேன். தொலைகாட்சி செய்திகளைத்தான் தமிழகத்தில் பார்கமுடிவதில்லையே! மின் மிகை மாநிலமாக தமிழகம் என்று மாறுமோ என்ற ஏக்கத்தோடு காத்திருக்கும் மாக்களாகி போனோம் நாம்.“பால்தாக்கரே இறந்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது” ‘ஒருவர் இறப்பதும் பிறப்பதும் இயல்புதானே அதற்கு இப்படியா காட்டி கூட்டுவது என்று முகநூலில் கேட்ட பெண்ணும் அதனை லைக் செய்த பெண்ணும் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர்”என்ற செய்திதான் அது. பாவம் பால்தாக்கரே மீது போட வேண்டிய சட்டத்தை அந்த இரு பெண்கள் மீது போட்டு விட்டனர் என்று அங்கலாய்க்கின்றனர் பொதுமக்கள். ஏற்கனவே முகநூலை உபயோகிக்காதே பிரச்சனைகள் வரும் என்று எச்சரித்த என் பெற்றோர்கள் இந்த செய்தியை பார்த்தால் என்ன செய்வது என்ற அச்சத்துடனே மடித்து வைத்தேன் அந்த நாளிதழை.“உலகின் சிறந்த இணையம்”, “மக்கள் குரல் விருது”, “சிறந்த படைப்பு” என்ற பல விருதுகள் பெற்றுள்ள இந்த இணையம் ஏனோ இஸ்லாத்திற்கு எதிரானது என்றும், மத வேற்றுமையை ஏற்படுத்த கூடியது என்றும் சீனா,வியட்நாம். ஈரான், உஸ்பெகிஸ்தான்,பாகிஸ்தான்,சிரியா,பங்களாதேஸ் போன்ற நாடுகள் இந்த இணையத்தை தடைசெய்துள்ளது.2004 ஆம் ஆண்டு ஜுகன்பர்க் என்ற மாணவரால் தொடங்கப்பட்ட இந்த இணையதளம்  8 ஆண்டுகளில் 15 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.உலகில் உள்ள நாடுகளில் முகநூலை யும் ஒரு நாடாக கருதினால் உலகின் ஐந்தாவது மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் முகநூலை தினமும் உபயோகிக்கின்றனர். உலகின் மிகபெரும் ஊடகம் facebook தான் என்று சொல்வதில் எவ்வித ஐயமும் இல்லை. முகநூல் என்று அழகு தமிழில் அறியப்படும் இந்த இணையதளம் உலகின் இரண்டாவது மிகப்பரவலான இணையதளமாகும்.facebook -ஐ அதிகம் பயன்படுத்துவதில் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. கிட்டத்தட்ட 56 மில்லியன் இந்தியர்கள் முகநூலை தினமும் பயன்படுத்துகின்றனர். இந்திய முஸ்லிம்கள் இதனை சரியான முறையில் பயன்படுத்துகிறார்களா என்று கேட்டால் குறைவு என்றே கூற முடியும். அதுவும் தமிழக முஸ்லிம்களில் முகநூல் உபயோகர்களாக இருக்கும் பலரில் அறிவினை விடுத்து “உணர்வு”களை காசாக்கும் சிலர் இயக்க வெறிக்காக அதனை பயன்படுத்தி இஸ்லாத்தை நோக்கி வருபவர்களையும் விரண்டோட செய்கின்றனர்.facebook அமெரிக்க தேர்தலில் பெரிய மாற்றங்களை உண்டாக்கியதிலும், கொலம்பிய மக்களை கொலம்பிய ஆயுதப்படைக்கு எதிராக ஒன்று திரட்டியதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றது.மிகபெரும் மாற்றங்களை முகநூளின் மூலம் மிக எளிதாக ஏற்படுத்தலாம். ஒரே நேரத்தில் தன்னுடைய கருத்தை ஆயிரமாயிரம் மக்களின் மனதில் பதிக்க முடியும் எனபது தான் இந்த இணையத்தின் சிறப்பம்சமாகும்.இந்த இணையம் இஸ்லாத்திற்கு எதிரானது என்ற கருத்தால் முஸ்லிம்களுக்கு என்று பாகிஸ்தானில் மில்லத்பேஸ்புக் (millatfacebook) என்ற இணையதளம் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது. 1.56 பில்லியன் முஸ்லிம்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதளம் இப்போது 3,33,000 உபயோகர்களைக் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் facebook அளவிற்கு கருத்துகளை அதிகமானோரைச் சென்று அடைவதில்லை என்பது இதனைப் பயன்படுத்துபவர்களின் கருத்து. இஸ்லாமிய கருத்துகளை முஸ்லிம்களுக்குள்ளேயே பரப்புவதில் என்ன பயன், முஸ்லிம் அல்லாதோர்களும் அதனை அறிந்து கொள்ள வேண்டுமானால் facebook தான் தேவை என்கிறார்கள் millatfacebook உபயோகர்கள்.ஆனாலும் துனிசியா,எகிப்து போன்ற அரபு நாடுகளில் நடைபெற்ற, நடைபெற்றுவரும் இஸ்லாமியபுரட்சிக்கு facebook மிகமுக்கிய காரணம் என்பதை நாம் அறிந்ததே எனவே எந்த ஒரு பயன்பாடும் நாம் பயன்படுத்துவதை வைத்து தீர்மானிக்கப்படும் என்பது தெளிவாகிறது.சொல்ல வரும் கருத்து புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். facebook ல் தீமையும் உள்ளது,நன்மையும் உள்ளது. தீமையை புறம்தள்ளி நன்மையை பயன்படுத்துவோம். அனைவரும் அதில் இணைந்து இஸ்லாமியக்கருத்துகளைப் பரப்புவோம் நாம்.--சபீர் அஹ்மத்.

No comments:

Post a Comment