Tuesday, 12 February 2013

காதலர் தினம் நமது கலாச்சரம் இல்லை அது மேல் நாட்டு அனாச்சாரம் என்று விளக்கும் விதமாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (SIO) சார்பாக கோவை கல்லூரிகளுக்கு அருகில் கவன ஈர்ப்பு அட்டைகள் வைக்கப்பட்டன....



உண்மை..... The truth.....

சவூதி போதகர்-மகள் விவகாரம்: புளுகுமூட்டை ஊடகங்கள்...


சில நாட்களுக்கு முன்பாக சவூதியை சேர்ந்த போதகர் (?) ஒருவர் தன் 5 வயது குழந்தையை வன்கொடுமை (rape) செய்து கொடுமைப்படுத்தியதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லுமா என்ற பெயருடைய அந்த குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததையும் உலக ஊடங்கங்கள் பெரிய அளவில் பேசின. பேசியதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், அந்த போதகர் (?) ரத்த பணம் கொடுத்து தப்பிவிட்டதாக அங்கலாய்த்தன மீடியாக்கள். இந்த விவகாரத்தில் தற்போது உண்மை நிலவரங்கள் தெரியவந்துள்ளன.

அந்த குழந்தை வன்கொடுமை செய்யப்படவும் இல்லை, கொலை செய்தவன் தண்டனையில் இருந்து தப்பவும் இல்லை.

லுமாவின் தாய் 'தன் மகள் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று மருத்துவமனை ஆதாரங்கள் மற்றும் போலிஸ் ஆதாரங்கள் தெரிவிக்கும்போது, இப்படியான குற்றச்சாட்டுகளை தன் மகளை அசிங்கப்படுத்தும் நிகழ்வாகவே தான் கருதுவதாக' வருத்தத்துடன் கூறியுள்ளார். தன் முன்னாள் கணவர் தன் குழந்தையை துன்புறுத்தியதாக புகார் செய்த இவர், தன் மகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஊடகங்கள் பரப்பியதை மறுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த கொலைகாரன் தற்போது சிறையில் தான் உள்ளதாகவும், இவர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளதாகவும் சவூதி நீதித்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. ஊடகங்கள் ஒரு செய்தியின் உண்மை நிலையை தெளிவாக ஆராய்ந்த பிறகு செய்தி வெளியிடுவது சிறந்தது என்று நீதித்துறை அறிவுறுத்தியுள்ளது.

நான் மேலே சொன்ன சவூதி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தியை காண <<இங்கே>>
http://gulfnews.com/news/gulf/saudi-arabia/killer-cleric-not-sentenced-yet-saudi-arabia-1.1143203

என்ன ஆச்சர்யம்...சவூதி நீதித்துறை செய்யாததை செய்ததாக பரபரப்பை கிளப்பிய ஊடகங்கள், சவூதி அரசாங்கத்தின் மறுப்பை அதே வீரியத்தோடு கொண்டு செல்லவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த மறுப்பு எத்தனை பேருக்கு தெரியும் என்பது கூட தெளிவாகவில்லை.

உண்மை அடுத்த தெருவுக்கு செல்வதற்குள் பொய் ஊரை சுற்றி வந்துவிடும் என்ற பழமொழி 



தான் நினைவுக்கு வருகின்றது...

Saturday, 19 January 2013

இந்தியாவும் வல்லரசு தான்...... லண்டன் ஆய்வு தகவல்.




எவ்வளவு கொட்டுனாலும் வாங்கிக்கிறாங்க.... இவங்க பெரிய வல்லரசு யா...! என்பது போல லண்டன் பொருளாதார மேதைகள் மேற்கொண்ட ஆய்வில் 2050 ஆம் ஆண்டு உலகின் வல்லரசு பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடமும் இந்தியா மூன்றாவது இடத்தையும் பெரும் என்று கூறுகிறார்கள். (அப்ப 2020 கனவு தானா என்று கேட்பது புரிகிறது)

நமது பொருளாதார மேதாவி பிரதமர்.மன்மோகன் சிங் இதனைக்கூறி சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். அமெரிக்காவில் விற்காத வீணான பொருட்களை மன்னிக்கவும் குப்பைகளை கொட்ட சீனா முதல் குப்பை கூடை, இரண்டாவது குப்பை கூடை இந்தியா என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த ஆய்வு. ஆம் 90 பைசா தயாரிப்பு செலவு கொண்ட பெப்சி இங்கு வெறும் 12 ரூபாய் தான். அதனை குடிப்பதால் இந்திய ஆண் மகன் பெண்களை எளிதில் வசீகரிக்க முடியும், இந்திய பெண்கள் தன் அந்தஸ்தை மற்றவர்கள் முன்னிலையில் அதிக மாக்க முடியும். ஆம் தன் வீட்டில் பசியாற குடிப்பது கஞ்சியாக இருப்பினும் கல்லூரியில் கையில் பிடிப்பது coco cola ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறது நம் மனம்.

சமீப காலங்களாக அழகிப்போட்டியில் முதலிடம் பிடித்த நமது வீர மங்கைகள் திரும்பவும் மன்னியுங்கள் அழகு பதுமைகள் முதலில் செய்வது தன் அழகுக்கு காரணம் இந்த ...................லீ தான், தன் தலைமுடி கருமைக்கு காரணம் இந்த ...............பூ தான் என பேட்டியும், விளம்பரமும் கொடுப்பார்கள்(அவங்க பாட்டி அங்க திட்டிட்டு இருப்பாங்க). யன்னா அழகு அந்தப்புள்ள.....

இது போல தான் இந்த லண்டன் ஆய்வும், வால்மார்ட் போன்ற கம்பனிகளுக்கு நாம் சாதா கம்பளம் இல்ல சிவப்பு கம்பளம் விரிக்கணும் அல்லவா... அதன் மூலம் இன்னும் பல குப்பைகளை விற்க முடியுமல்லவா அதற்கு தான் இந்த ஆய்வு என்கிறது என் குட்டி மனசு.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இந்தியா குப்பைக் கூடை அல்ல என்பதைக் காட்ட உங்கள் பங்கீடு என்ன? கமென்ட் பண்ணுங்க...... 

Tuesday, 15 January 2013

படைப்பின் நுட்பம்......ship.


கப்பல்.....................................


நம் அனைவருக்கும் கப்பலில் செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் சிறிதளவு பயமும் அதனுடன் கலந்தே காணப்படும். ஏனெனில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவ்வளவு தான்!
மிகப்பெரிய சமுத்திரத்தின் மேலே அணைத்து மக்களையும் ஏற்றிக்கொண்டு, சரக்குகளையும், வாணிபப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு பயணிக்கும் கப்பலைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அதிலும் போர்க்கப்பல், சுற்றுலாக்கப்பல் எனப் பல வகைகள்.

உலகில் பரப்பில் அதிகமான சதவீதம் சூழப்பட்டுள்ள கடலில் எத்தனை, எத்தனை உயிர் வளங்கள், கனிம வளங்கள், அழகான வண்ண மீன்கள் என அனைத்தும் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்பவைகளாகவே இறைவன் படைத்துள்ளான்.

இந்த பறந்து விரிந்த கடலைப் பார்க்கும் போது கடற்கரையில் இருக்கும் நமக்கு உடல் சிலிர்க்க வேண்டாமா? இத்தனை வளங்களையும் மனிதனுக்காக உலகில் படைத்து தந்த இறைவன் மனிதனிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன? என்பதை குறித்து சிந்தியுங்கள் இறைவனின் புகழைப் பரப்புங்கள்!

........அவனே (உங்களுக்காக) கடலை வசப்படுத்தி தந்துள்ளான். அதிலிருந்து நீங்கள் புத்தம்புதிய மாமிசத்தை புசிக்க வேண்டும் என்பதற்காகவும், நீங்கள் அணிகின்ற அழகுப் பொருட்களை அதிலிருந்து வெளிக்கொணர்ந்திட வேண்டும் என்பதற்காகவும்! மேலும், கப்பல் கடலைப் பிளந்துக் கொண்டு செல்வதையும். நீர் காண்கின்றீர். மேலும், உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்துக் கூடியவர்களாய் நீங்கள் திகழ்வதற்கு ஆகவுமே இவையெல்லாம் இருக்கின்றன.(திருக்குர்ஆன்; 16:14)

Friday, 11 January 2013

created by sceince


யாவும் இயற்கை !
எல்லாம் தற்செயல் !



எல்லையற்ற வான வெளியில் அங்கும் இங்குமாக இறைந்து கிடந்த பலவகையான இயற்கை மூல அணுக்கள் திடீரென்று ஒரு நேரத்தில் “தற்செயலாக” ஒன்றாக இணைந்து கொண்டன. அப்படி இணைந்தவுடன் அது “தானாகவே” குழம்பாக மாறிக்கொண்டன அவை சூரியனாக இன்னும் பல கோளங்களாக மாறி எத எதையோ சுற்றி வந்தன பிறகு அதில் இருந்து பல துண்டுகள் பிரிந்து வந்தன அதில் ஒன்று தான் நாம் வாழும் உலகம் அதில் இருந்து இன்னொரு துண்டு பிரிந்து போனது அது தான் நிலா! ஆம் மனிதன் வெற்றிக்கொடி நாட்டி வந்திருக்கின்றானே ஒளிப் பிரதிபலிக்கின்ற அதே சந்திரன் தான். எல்லாம் தற்செயல் தான்................................................................................


பிரிந்து போனதே அந்த பூமி.....! பாவம் அதுவும் எவ்வளவு காலம் தான் கொதித்து கொண்டு இருக்கும் “தற்செயலாகவே” அது குளிர்ந்தது. அது மட்டுமா திடீரென்று “தானாக” பள்ளங்களும் மேடுகளும் உருவாகின. பிறகு “தற்செயலாக”பிராண வாயுவும் (ஆக்சிஜன்) நீரக வாயுவும் (ஹைட்ரஜன்) சேர்ந்து நீராக மாறியது அதுவும் கொஞ்சம் நஞ்சம் இல்லை நண்பர்களே நாம் இன்று பார்கின்ற கடல்கள்..... பெரும் சமுத்திரங்கள் எல்லாம் அப்படி உருவாகியது தான்.... அதில் உப்பும் (உப்பு எப்டி உருவாச்சு நு கேக்காதீங்க பா..அதுவும் தானாதான்) தானாக கலந்து விட்டது இல்லை என்றால் கற்பனை செய்து பாருங்கள் உப்பில்லாத சாப்பாடு தான் நாம் சாப்பிட்டு இருக்க வேண்டும்.அப்படி உருவான நீரும் கூட சரியாக அந்த பள்ளங்கள் நிறைந்த உடன் நின்று விட்டன (சத்தியமா தான தான்). இப்பவும் வான்வெளியில் அந்த வாயுக்கள் உள்ளன ஆனால் அப்படி எல்லாம் உருவாகாது.....
                           தொடரும்.....
இப்படிக்கு
அறிவியல்
பகுத்தறிவு தீர்பளிக்கிறது எனும் புத்தகத்தில் இருந்து சில மாற்றங்களோடு.

Wednesday, 9 January 2013

PLANT EVOLUTION ..............

இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உங்கள் மீது நிலவட்டுமாக.....


உலகம் நெருப்பாக இருந்து பிறகு குளிர்ந்து, மழை அதிக காலத்துக்கு பெய்து கடல்கள் நிரம்பி பிறகு சில அமிலங்கள் மற்றும் பல தனிமங்கள் சேர்ந்து நுன்னியுயிரிகலான அமீபா, பக்டீரியா உருவாகின பிறகு அப்படியே காலத்திற்கு ஏற்ப மாறி மாறி பல உயிரினங்கள் தாண்டி மனிதன் வந்தான் இதுதான் டார்வின் மற்றும் அவரைச் சார்ந்த விஞ்ஞானிகளின் கருத்தும் கடவுள் இல்லை என்றும் குறிப்பாக இஸ்லாமை எதிர்க்கும் மனிதர்களின் கருத்து.



ஆனால் ஏன் மனிதன் வித விதமாக சாப்பிடும் உயிரான தாவரங்களைப் பற்றிய EVOLUTION THEORY தெளிவாக இல்லை.
உதாரணத்திற்கு ஒரே விதமான வெப்பம், சுற்றுச் சூழல் கொண்ட காடுகளில் எப்படி ஆயிரக்கணக்கான வித விதமான மரங்கள், செடிகள் வளர்ந்தன. அதில் பல விதமான பழங்கள் உருவாகின,அவற்றில் பல சுவைகள் கொண்ட பழங்கள் உருவாகின........? அவை எப்படி தகவமைப்பினை மாற்றி கொண்டு வாழ்வதற்காக மாறின என்று கூற முடியுமா......? அதுவும் ஒரு உயிரினம் தான் ஆனால் விலங்குகளுக்கு நீங்கள் கதை அளந்தது இதற்கு அளக்க முடியுமா? கேள்விதான்,
 விடை தெரியாது அவர்களுக்கு ஏனெனில் அவர்களின் கருத்து தவறானது.

இதோ இறைவனே கேட்கின்றான் கேள்வியை.................பதில் இருக்கிறதா?

“பூமியை அவன் எல்லாப் படைப்புகளுக்காவும் அமைத்தான்.அதில் விதவிதமான சுவைமிகு கனிகள் ஏராளமாய் இருக்கின்றன. பேரித்த மரங்களும் இருக்கின்றன. அவற்றின் பழங்கள் பாலைகளால் மூடப்பட்டு இருக்கின்றன.விதவிதமான தானியங்கள் உள்ளன. அவற்றில் உமியும் உண்டு; மணியும் உண்டு. ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த அருட்கொடைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?”
 (திருக்குர்ஆன்:55;10-13)

பதில் இருக்கிறதா.............................................................................................................?

Tuesday, 8 January 2013

எழுதுகோல்................... BALLPOINT PEN

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக.....

"பூமியில் உள்ள மரங்கள் அனைத்தும் எழுதுகோல் ஆனாலும், கடல் முழுவதும் (மையாகிவிட்டாலும்) அதற்கு மேல் இன்னும் ஏழு கடல்களின் மை அளித்து உதவினாலும் கூட அல்லாஹ்வின் வாக்குகள் (எழுதித்) தீர்ந்து போக மாட்டா. திண்ணமாக அல்லாஹு வலிமை மிக்கவனும் நுண்ணறிரிவாலனும் ஆவான்." (திருக்குரான் 31:27)

பள்ளிக்கூடம் சென்ற நமக்கு பேனாவை அறிமுகப்படுத்த தேவை இல்லை. ஆனால் நாம் எழுதும் பால் பாயிண்ட் பேனாக்களை பற்றிய சில சுவையான தகவல்களை அறிந்து கொள்வது அவசியம். முதன் முதலில் 1938 ஹன்கேரியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் லேச்ஜியோ பீரோ என்பவர் தான் பால் பாயிண்ட் பேனாவைக் கண்டறிந்தார்.

உலகிலேயே முதன் முதலில் நியூயார்க் நகரில் 1945 ம் ஆண்டு பால் பாயிண்ட் பேனா விற்பனை செய்யப்பட்டது.

சுமார் 4000-7500 வரை நீளமுள்ள கோடு அல்லது ஐம்பதாயிரம் வார்த்தைகளை ஒரு பால் பாயிண்ட் பேனாவினால் எழுதலாம்.
சராசரியாக ஒரு மனிதன் ஒருவருடத்தில் 4.3 பால் பாயிண்ட் பேனாக்களை உபயோகிக்கின்றான்.

95 சதவிகிதம் மக்கள் பால் பாயிண்ட் பேனா பரிசாகக் கிடைத்தால் எழுதக்கூடிய முதல் வார்த்தை அவனுடைய பெயர்தான் என்று இணையதளங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க வில் மட்டும் 2 பில்லியன் க்கும் அதிகமான பல் பாயிண்ட் பேனாக்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த பேனாக்களின் மூடி அடிப்பதினால் ஒவ்வொரு ஆண்டும் 100 இறப்புகளும் இந்த வகை பேனாவினால் ஏற்படுகின்றன.




இந்த பிலாட்டினத்தால் ஆன பால் பாயிண்ட் பேனா தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த பேனா ஆகும்.... இதன் விலை எவ்வளவு தெரியுமா? ஒரு மில்லியன் யுரோ. அதாவது 721,98,67,787 ருபாய் மட்டும் தான் சீக்கிரமா வாங்கிடலாம் ஓகே.....

வல்ல இறைவன் நமக்கு அருளியுள்ள இந்தப் பேனாவை எப்படி உபயோகப்படுத்தினோம் என்பதைக் குறித்தும் நாளை மறுமையில் கணக்கைச் சமர்பிக்க வேண்டும். உண்மையைத் தெளிவாக எழுதுவோம். இம்மை தேர்வில் மட்டுமல்ல, மறுமையிலும் வெற்றி பெறுவோம். இன்ஷா அல்லாஹ். 

Monday, 7 January 2013

JIHAD.................................!



அஸ்ஸலாமு அழைக்கும் 'வரஹ்'

ஜிஹாத் என்றால் என்ன ?

 
சுவாமிஜி ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்களின் விளக்கம்..! 





அனைத்து சமயங்களும் நல்லதைத்தான் 
போதிக்கின்றன , ஆனால் அது கயவர்களின் கைகளில் மாட்டி கொள்ளும் போது தான் , மனிதனின் பலகினத்தை பயன்படுத்தி அவனை மதம் என்ற போர்வையில் மாய்த்து அப்பாவி மக்களை ஏவி விட்டு சுகம் காண்கின்றனர் , இருந்தாலும் சில நல்ல பெரியவர்கள் ,மத குருமார்கள் மக்களை பண்படுத்த செய்கிறார்கள் ,அப்படி ஒரு நல்ல சமூக நல்லிணக்கத்தை எதிர் பார்த்து தன் உரையை எடுத்துரைக்கும் அந்த மரியாதைக்குரிய சுவாமிஜி பெரியவரின் பெயர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள்.

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்ற இந்து மத பெரியவர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள் கான்பூர் நகரில் இந்த மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்லாமிய ஜிஹாதைப் பற்றி கருத்துரையை வழங்கினார்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே! இங்கு நான் சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன். 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆனை படித்துள்ளேன். பத்திரிக்கையிலும், நண்பர்கள் மூலமாகவும் இஸ்லாத்தைப் பற்றியும் முகமது நபியைப் பற்றியும் பல தவறான கருத்துகள் என்க்குள் விதைக்கப்பட்டிருந்தது. இந்த மக்களும், பத்திரிக்கைகளும் குர்ஆனைப் பற்றி சொல்வது உண்மைதானா என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் குர்ஆனை ஆராய ஆரம்பித்தேன். கிராமத்தில் சொல்லப்படும் பழமொழி ஒன்றைப் போல் குர்ஆனில் உள்ள நல்ல விஷயங்களை படிப்பதை விட்டு விட்டு அதிலிருந்து என்ன தவறுகளை உண்டாக்கலாம் என்று சிநதிக்க ஆரம்பித்தேன். சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளும், குர்ஆனின் சில வசனங்களும் எதிர்மறையாக என்னை ஒரு புத்தகம் எழுதத் தூண்டியது. அதன் தலைப்பு "THE HISTORY OF ISLAMIC TERRORISM". ஆனால் நான் எழுதியவை அனைத்தும் தவறு என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.

இந்து மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்துக்கு மறு பெயர் ஜிஹாத் என்றும், ஜிஹாத் என்பது தீவிரவாதம் என்றும் புரிந்து வைத்துள்ளனர். நான் புரிந்து கொண்ட வகையில் இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றியும், ஜிஹாத் என்றால் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ள மஹா பாரத காலத்துக்கு நாம் செல்ல வேண்டும்.

கௌரவர்கள், பாண்டவர்கள், துரியோதனன், அர்ஜூனன் கதைகள் எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும்.

"
அர்ஜூனா, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது; இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதே. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்."

பகவத் கீதை அத்தியாயம் 2 ல் வரும் வசனங்களே இவை. அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் எதிராக நடக்கும் ஒரு யுத்தம் யுத்தம் அல்ல அது தர்ம யுத்தம் என்கிறது இந்து மத வேதங்கள். அங்கு போரிடுவதற்கோ தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை என்கிறது கீதை. இந்த யுத்தத்தில் தோற்றாலும் நீ சொர்க்கம் செல்வாய் என்று உபதேசிக்கப்படுகிறது.

இதே போன்றுதான் மெக்கா நகரில் அந்த மக்களின் குடி விபசாரம், சிலை வணக்கம், வட்டி, பெண் கொடுமை, பெண் குழந்தைகளை கொல்லுதல் போன்ற செயல்களை விமரிசித்து 'ஒரே இறைவனை வணங்குங்கள்' என்று உபதேசித்தார் நபிகள் நாயகம். உடனே அங்கிருந்த குரைஷிகள் இவரையும் இவரது ஆதரவாளர்களையும எதிரிகளாக பாவிக்க தொடங்கினர். பலரை கொலை செய்தனர். அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தனர். ஊர் விலக்கம் செய்தனர். இவர்கள் செய்த கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி மதினாவை நோக்கி செல்கிறார் நபிகள். அதே குரைஷி கூட்டம் அங்கும் முஸ்லிம்களை பின் தொடர்ந்து வருகிறது. முஸ்லிம்களை அழிக்கப் பார்க்கிறது.

ஒரு வருடம் அல்லது இரு வருடம் அல்ல. 13 வருடங்கள் இது போன்ற கொடுமைகளை முகமது நபியும் அவரது தோழர்களும் அனுபவிக்கின்றனர். இவ்வளவு கொடுமைகள் தினம் தினம் நடந்தும் தனது தோழர்களிடம் 'பொறுமையாக இருங்கள். பொறுமையாளர்களோடு நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான்' என்று அமைதியாக உபதேசித்தார். மக்கா குரைஷிகளின் அக்கிரமங்கள் உச்ச கட்டத்தை அடைந்த போதுதான் தங்களை தற்காத்து கொள்ள எதிர்த்து போரிடுகிறார்கள் முஸ்லிம்கள். மதினாவில் பயந்து தஞ்சம் அடைந்த முஸ்லிம்களை கொல்வதற்காக படை திரட்டிக் கொண்டு மக்காவிலிருந்து மதினா நோக்கி குரைஷிகளின் படை வருகிறது. பகவத் கீதையில் எந்த சூழலை நாம் பார்ததோமோ அதே சூழல்தான் இங்கு முஸ்லிம்களுக்கும் உள்ளது. இதுதான் இஸ்லாத்தில் ஜிஹாதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீவிரவாதம் என்று பெயரிடுவீர்களா? தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள ஒருவன் எடுக்கும் தற்காப்பு முயற்சிக்கு தீவிரவாதம் என்ற சொல் சரியாகுமா? பகவத் கீதையில் வரும் சம்பவங்களை நியாயப்படுத்தும் பலர் இஸ்லாமியர்களின் தற்காப்பு போர்களை விமரிசிப்பது ஏன்?

நமது நாட்டில் தங்களை வளர்த்துக் கொள்ள சிலர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் நிரந்தரமாக பிரித்து வைக்க முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லி தங்களை வளமாக்கி கொள்கின்றனர். ஜிஹாதுக்கு தவறான விளக்கத்தை கொடுத்து இந்துக்களை பிரிக்க பார்க்கின்றனர்.நானும் கூட கூட்டத்தில் முன்பு பேசியிருக்கிறேன். ' ஹிந்துக்களின் தலை முடியை பிடித்து இழுத்து அவனது தலையை வெட்டினால் உனக்கு நேராக சொர்க்கம். அதற்கு பெயர்தான் ஜிஹாத். அப்படித்தான் குர்ஆனில் இருக்கிறது' என்று பல கூட்டங்களில் பேசியுள்ளேன். எனக்கு அவ்வாறுதான் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு பேசியது என்னுடைய தவறுதான். என்னை விட பெரிய தவறு செய்தது இங்கு அமர்ந்து இருக்கும் முஸ்லிம்கள் தான். இந்த உண்மையை இத்தனை காலம் என்க்கு விளக்காமல் இருந்தது உங்கள் தவறல்லவா?

(
போர் சம்பந்தமாக வரும் குர்ஆன் வசனங்களை விளக்கி அது எந்த காலத்தில் யாருக்கு அருளப்பட்டது என்பதை ஆதாரங்களோடு விளக்குகிறார். இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கும் ஆதாரங்களை வைக்கிறார்)

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த போது தோழர் அக்ரம் பாய் அவரது வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். அவ்வாறு நான் செல்லும் போது வழியில் மாடியில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லிம் நான் வருவதை பார்த்து என் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை வேண்டுமென்றே துப்பினார். அருகில் அக்ரமுடைய வீடு. அக்ரமை அழைத்து கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னேன். எனது நிலையைப் பார்த்து அக்ரம் பதறி விட்டார். 'என்ன ஆனது' என்று கேட்டார். 'உனது தெருவில் உள்ள ஒரு முஸ்லிம் நான் இந்து என்பதால் என் மீது எச்சிலை துப்பி விட்டார' என்றேன். நான் இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இது போன்றவர்களால்தான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. இது போன்ற ஆட்கள் இந்துக்களிலும் இருக்கிறர்கள், முஸ்லிம்களிலும் இருக்கிறார்கள். நான் முன்பு அலாவுதீன் கில்ஜியைப் பற்றி ஒரு வரலாற்று சம்பவத்தை படித்தேன். அதாவது இநதுக்கள் முஸ்லிம்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் எச்சில் துப்பினால் ஹிந்துக்கள் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றியதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது பொய்யான வரலாற்று திரிபு என்பது பின்னாளில் தெரிந்து கொண்டேன்.

ஆனால் என் மேல் எச்சில் துப்பிய அந்த நபரின் செயலைப் பார்த்து அலாவுதீன் கில்ஜி கண்டிப்பாக இப்படி ஒரு சட்டம் இயற்றியிருப்பார் என்று முன்பு நினைத்து கொண்டேன். குர்ஆனின் கட்டளைகளை படித்தவுடன் இதன் சட்டங்களுக்கும்இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளதையும் இங்கு சுட்டிக் காட்ட கடமைப் பட்டுள்ளேன்.

இஸ்லாத்தைப் பற்றி ஏதும் குறை சொல்ல வந்தீர்கள் என்றால் குர்ஆனை கொண்டு எதையும் பேசுங்கள். தவறாக நடக்கும் முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள் என்று சொல்லி எனது உரையை முடிக்கிறேன்..
என்று தனது உரையை முடித்து கூடியிருந்த அனைத்து மக்களின் மனங்களையும் கவர்ந்தார் .
உலக நாடுகளையே ஆச்சரியம் பட வைக்கும் நாடு நம் இந்திய நாடு ,வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற தத்துவத்தை முன் நிறுத்தி மனித நேயத்தை காக்க வேண்டும்

என்பது தான் ஒரு நல்ல மனித பிறவியின் எண்ணமாக இருக்க வேண்டும் ,மக்களை பிரிக்கும் எந்த சூழ்ச்சியிலும் மாய்ந்து விடாமல் சிந்தித்து நியாயத்தின் பக்கமே இருக்க வேண்டும் மனிதனுக்காகவே மதம் ,மதத்திற்காக மனிதன் இல்லை என்பது இந்த கட்டுரையின் நோக்கம் இந்த சுவாமிஜி போன்ற நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் இப்படிமக்களை நல்வழி படுத்தி பண்படுதுவோமானால் நம் இந்தியாவை எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது. 

இந்தியா விழும் இந்த தண்டனை வேண்டும்...........

rape punisment in islam................... r u agreed.......

 

hit like


அஸ்ஸலாமு அழைக்கும் ‘வரஹ்’......................

இஸ்லாமே அணைத்து தீமைகளுக்கும் தீர்வு................................................

டெல்லி பாலியல் பலாத்காரம்...........................




என்னமோ இந்தியாவில் இப்படி ஒன்றுதான் நடந்தது போலவும் அந்த பெண் வீரமங்கை போல காண்பிக்கப்படுகிறது. ஐ நா பொதுசெயலாளர் இரங்கல் தெரிவிக்கிறார், மன்மோகன்,சோனியா அஞ்சலி செய்கிறார்கள். நம்முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவிக்கிறார், உலக அரங்கில் இந்தியாவின் மானம் போய்விட்டதாக (எப்போது இருந்தது நு கேக்ககூடாது) கூக்குரல் இடுகின்றனர் மக்கள். அப்படியானால் நான் சொல்கிறேன் இந்தியாவில் 2012 ல் மட்டும் உருவான வீர மங்கைகள் எத்தனை பேர் தெரியுமா 27000 பெண்கள்...... எப்படியோ இதற்காவது வீதியில் இறங்கினார்களே.
ஏன்......ஏன்.....ஏன்.......இந்த குற்றங்கள் நடைபெறுகிறது இதற்க்கு தீர்வுதான் என்ன? என்றதும் பதில் உடனடியாக வருகிறது இவர்களிடத்தில் இருந்து......
இஸ்லாமிய தண்டனை வழங்கப்படவேண்டும் அப்போதுதான் இனி இவ்வாறு நடக்காது. இஸ்லாமியர்கள் போல் பெண்கள் பர்தா அணிய வேண்டும் அப்போது தான் ஆணின் வக்கிர பார்வையில் இருந்து பெண்கள் தப்பிக்க முடியும் என்பவை அவை..... இவை இறைவனால் வகுக்கப்பட்ட சட்டங்கள் அல்லவா....எப்படி புறம்தள்ள முடியும் இல்லையா ...............? 

அதான் மக்கள் மனதாலேயே வருகிறது சட்டமாக வேண்டும் இறைவனின் சட்டம் என்று, வேறு ஒரு கோஷத்தால். 

Sunday, 6 January 2013

                   நம்பிக்கை

                                 இஸ்லாத்தின் தூண்கள்

                                    

ஒரு வீடு கட்டப்பட வேண்டுமானால் எவையெல்லாம் தேவைப்படும்? அடித்தளம் வேண்டும், தூண்கள் வேண்டும், சுவர்கள் வேண்டும். பிறகு கதவுகள், ஜன்னல்கள், அழகுக்கும், உறுதிக்கும் தேவையான ஏனைய பொருட்கள் முதலியன வேண்டும். இருப்பினும் வீட்டைத் தாங்கி நிற்கும் தூண்கள் மிக முக்கியமானவையாகும். தூண்கள் இல்லை என்றால் சுவர்களைக் கட்ட இயலாது என்பது மட்டுமல்ல.மேல்கூரை வைக்கவும் இயலாது. தூண்களின் உறுதியைப் பொறுத்துதான் மேல்கூரையின் உறுதியும் இருக்கும். தூண்களின் பலம் குறைந்து விடுவதாலும், தகர்ந்து போவதாலும் மேல் கூரை இடிந்து விடும். கூரை இல்லாத வீட்டில் வாழ இயலாது அல்லவா?  
நமது இந்த வாழ்கை பயணத்தை ‘இஸ்லாத்தை’ நாம் ஒரு வீடாகக் கற்பனை செய்வோம்
தூண்கள் எவை? 

Saturday, 5 January 2013

சிந்திப்போமா.....


சிந்திக்க வேண்டிய  பிரச்சனைகள்............................

குர்ஆனுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்?
சகோதரர்களே !
ஒரு வகையில், இன்றைய உலகில் முஸ்லிம் பெருமக்கள் நற்பேறு பெற்றவர்களே! அவர்களிடம்தான் இறைவனின் வாக்கான திருக்குரான் முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கிறது. அது பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு அருளப்பட்டதோ முற்றிலும் அதே சொற்களில் இருக்கிறது.
மற்றொரு வகையில் , இன்றைய உலகில் முஸ்லிம் பெருமக்கள் துர்பாகியவான்களே! இறைவனின் வாக்கான திருக்குரானைத் தம்மிடம் வைத்து கொண்டிருக்கும் அவர்கள் அவர்கள் அதன் ஆசிகளையும், வரம்பிட முடியாத அருட்பேருகளையும் இழந்த நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் திருக்குரானை இறக்கி அருளியதன் நோக்கம்,அதனை அவர்கள் ஓதி உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும் எனபது தான். அதை வைத்து, இறைவன் படைத்த மண்ணகத்தில் இறைவனுடைய ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் எனபது தான்! அவர்களுக்கு கண்ணியத்தையும் வலிமையையும் கொடுப்பதற்காக அது வந்திருக்கிறது. மன்னகத்துக்கு அவர்களை உண்மையான இறைவனுடைய கலீபா வாய் ஆக்குவதற்கு அதுவந்திருக்கிறது. இதற்க்கு வரலாறு சான்று கூறுகிறது. அதன் அறிவுரைகளுக்குத் தக்கவாறு அவர்கள் செயல்பட்டபோது, அவர்களை அது உலகிற்குத் தலைவர்களையும் வழிகாட்டிகளையும் உயர்த்திவிட்டது.
ஆனால் இப்போது அது அவர்களிடத்தில் இந்த நிலையில் இல்லை. அதனை வீட்டில் வைத்து ஜின்களையும் பூதத்தையும் விரட்டுவது, அதிலுள்ள வசனங்களை எழுதி கழுத்தில் கட்டுவது, கரைத்து குடிப்பது, நற்கூலிக்காக பொருள் தெரியாமல் ஓதுவது போன்ற செயல்களில் தான் அது இன்று பயன்படுத்தப்படுகிறது. தமது வாழ்வில் குறுக்கிடும் பிரச்சனைகளுக்கு அவர்கள் வழிகாட்டியாய் அதனைக் கொள்வதில்லை.
“எங்கள் கொள்கை எப்படி இருக்க வேண்டும்; எங்கள் நடத்தை எவ்வாறு அமைய வேண்டும்; எங்கள் நற்குண,நல்லொழுக்கங்கள் எப்படி இருக்க வேண்டும்; வியாபாரத் தொடர்புகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்; நட்பிலும் பகைமையிலும் எந்த சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்; எமக்கும் மற்றவர்களுக்கும் இருக்கிற கடமைகள் யாவை; அவற்றை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்; எது எங்களுக்கு சத்தியம்----எது எங்களுக்கு அசத்தியம்; எதை நாங்கள் விட்டுவிட வேண்டும்; எதை நாங்கள் பின்பற்ற வேண்டும்----எதை நாங்கள் விட்டுவிட வேண்டும்; யாருடன் தொடர்பு வைத்து கொள்ள வேண்டும்-------------கூடாது; எங்களுக்கு நண்பர் யார்---பகைவர் யார்; எங்களுக்குக் கண்ணியமும் வெற்றியும் நற்பயனும் எதில் இருக்கின்றன------------ கேவலமும் ஏமாற்றமும் நஷ்டமும் எதில் இருக்கின்றன???” என்றெல்லாம் அவர்கள் அதனிடம் கேட்பதில்லை.
இந்த பிரச்சனைகளை எல்லாம் திருக்குரானிடம் கேட்பதை இன்று முஸ்லிம்கள் விட்டு விட்டார்கள். உலகாயவாதி, நாத்திகர்,இணைவைப்பவர், இஸ்லாத்தை மறுப்பவர், வழிகெட்டவர், சுயநலம் படைத்தவர், தம்முடைய உள்ளத்திற்குள்ளே மறந்திருக்கிற ‘சைத்தான்’ ஆகியோர்களிடம் இந்த பிரச்சனைகளைப் பற்றி இன்று முஸ்லிம்கள் ஆலோசனைகள் கேட்கிறார்கள்; அவர்கள் அளிக்கும் ஆலோசனைப்படியே நடக்கிறார்கள். எனவே இறைவனை அலட்சியம் செய்து விட்டு மற்றவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டு நடப்பதால் என்ன விளைவு ஏற்பட வேண்டுமோ, அதே விளைவு இன்று அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது! இந்தியா, சீனா, ஜாவா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, மொரகோ ஆகிய எல்ல நாடுகளிலும் அதே விளைவு தான் இன்று அவர்களுக்கு வஞ்சம் தீர்த்துக் கொண்டிருக்கிறது....
திருக்குர்ஆன் நன்மைகளின் ஊற்றாகும். எவ்வளவு நன்மையை அதனிடம் கேட்டாலும் அது உங்களுக்கு கொடுக்கும்.
---------- மௌலானாசையித் அபுல் அஹ்லா மௌதூதி (ரஹ்)
                           இஸ்லாமிய வாழ்வு எனும் புத்தகத்திலிருந்து.

நமது வலைதள பயணத்தில்.......

facebookகாலை நாளேடு ஒன்றை பார்த்ததும் அதிர்ட்சிக்குள்ளானேன். தொலைகாட்சி செய்திகளைத்தான் தமிழகத்தில் பார்கமுடிவதில்லையே! மின் மிகை மாநிலமாக தமிழகம் என்று மாறுமோ என்ற ஏக்கத்தோடு காத்திருக்கும் மாக்களாகி போனோம் நாம்.“பால்தாக்கரே இறந்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது” ‘ஒருவர் இறப்பதும் பிறப்பதும் இயல்புதானே அதற்கு இப்படியா காட்டி கூட்டுவது என்று முகநூலில் கேட்ட பெண்ணும் அதனை லைக் செய்த பெண்ணும் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டனர்”என்ற செய்திதான் அது. பாவம் பால்தாக்கரே மீது போட வேண்டிய சட்டத்தை அந்த இரு பெண்கள் மீது போட்டு விட்டனர் என்று அங்கலாய்க்கின்றனர் பொதுமக்கள். ஏற்கனவே முகநூலை உபயோகிக்காதே பிரச்சனைகள் வரும் என்று எச்சரித்த என் பெற்றோர்கள் இந்த செய்தியை பார்த்தால் என்ன செய்வது என்ற அச்சத்துடனே மடித்து வைத்தேன் அந்த நாளிதழை.“உலகின் சிறந்த இணையம்”, “மக்கள் குரல் விருது”, “சிறந்த படைப்பு” என்ற பல விருதுகள் பெற்றுள்ள இந்த இணையம் ஏனோ இஸ்லாத்திற்கு எதிரானது என்றும், மத வேற்றுமையை ஏற்படுத்த கூடியது என்றும் சீனா,வியட்நாம். ஈரான், உஸ்பெகிஸ்தான்,பாகிஸ்தான்,சிரியா,பங்களாதேஸ் போன்ற நாடுகள் இந்த இணையத்தை தடைசெய்துள்ளது.2004 ஆம் ஆண்டு ஜுகன்பர்க் என்ற மாணவரால் தொடங்கப்பட்ட இந்த இணையதளம்  8 ஆண்டுகளில் 15 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.உலகில் உள்ள நாடுகளில் முகநூலை யும் ஒரு நாடாக கருதினால் உலகின் ஐந்தாவது மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் முகநூலை தினமும் உபயோகிக்கின்றனர். உலகின் மிகபெரும் ஊடகம் facebook தான் என்று சொல்வதில் எவ்வித ஐயமும் இல்லை. முகநூல் என்று அழகு தமிழில் அறியப்படும் இந்த இணையதளம் உலகின் இரண்டாவது மிகப்பரவலான இணையதளமாகும்.facebook -ஐ அதிகம் பயன்படுத்துவதில் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. கிட்டத்தட்ட 56 மில்லியன் இந்தியர்கள் முகநூலை தினமும் பயன்படுத்துகின்றனர். இந்திய முஸ்லிம்கள் இதனை சரியான முறையில் பயன்படுத்துகிறார்களா என்று கேட்டால் குறைவு என்றே கூற முடியும். அதுவும் தமிழக முஸ்லிம்களில் முகநூல் உபயோகர்களாக இருக்கும் பலரில் அறிவினை விடுத்து “உணர்வு”களை காசாக்கும் சிலர் இயக்க வெறிக்காக அதனை பயன்படுத்தி இஸ்லாத்தை நோக்கி வருபவர்களையும் விரண்டோட செய்கின்றனர்.facebook அமெரிக்க தேர்தலில் பெரிய மாற்றங்களை உண்டாக்கியதிலும், கொலம்பிய மக்களை கொலம்பிய ஆயுதப்படைக்கு எதிராக ஒன்று திரட்டியதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றது.மிகபெரும் மாற்றங்களை முகநூளின் மூலம் மிக எளிதாக ஏற்படுத்தலாம். ஒரே நேரத்தில் தன்னுடைய கருத்தை ஆயிரமாயிரம் மக்களின் மனதில் பதிக்க முடியும் எனபது தான் இந்த இணையத்தின் சிறப்பம்சமாகும்.இந்த இணையம் இஸ்லாத்திற்கு எதிரானது என்ற கருத்தால் முஸ்லிம்களுக்கு என்று பாகிஸ்தானில் மில்லத்பேஸ்புக் (millatfacebook) என்ற இணையதளம் 2010ல் ஆரம்பிக்கப்பட்டது. 1.56 பில்லியன் முஸ்லிம்களை இலக்கு வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையதளம் இப்போது 3,33,000 உபயோகர்களைக் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் facebook அளவிற்கு கருத்துகளை அதிகமானோரைச் சென்று அடைவதில்லை என்பது இதனைப் பயன்படுத்துபவர்களின் கருத்து. இஸ்லாமிய கருத்துகளை முஸ்லிம்களுக்குள்ளேயே பரப்புவதில் என்ன பயன், முஸ்லிம் அல்லாதோர்களும் அதனை அறிந்து கொள்ள வேண்டுமானால் facebook தான் தேவை என்கிறார்கள் millatfacebook உபயோகர்கள்.ஆனாலும் துனிசியா,எகிப்து போன்ற அரபு நாடுகளில் நடைபெற்ற, நடைபெற்றுவரும் இஸ்லாமியபுரட்சிக்கு facebook மிகமுக்கிய காரணம் என்பதை நாம் அறிந்ததே எனவே எந்த ஒரு பயன்பாடும் நாம் பயன்படுத்துவதை வைத்து தீர்மானிக்கப்படும் என்பது தெளிவாகிறது.சொல்ல வரும் கருத்து புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். facebook ல் தீமையும் உள்ளது,நன்மையும் உள்ளது. தீமையை புறம்தள்ளி நன்மையை பயன்படுத்துவோம். அனைவரும் அதில் இணைந்து இஸ்லாமியக்கருத்துகளைப் பரப்புவோம் நாம்.--சபீர் அஹ்மத்.