சிந்திக்க வேண்டிய பிரச்சனைகள்............................
குர்ஆனுடன் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்?
சகோதரர்களே !
ஒரு வகையில், இன்றைய உலகில் முஸ்லிம் பெருமக்கள்
நற்பேறு பெற்றவர்களே! அவர்களிடம்தான் இறைவனின் வாக்கான திருக்குரான் முற்றிலும் பாதுகாக்கப்பட்டுள்ள
நிலையில் இருக்கிறது. அது பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எவ்வாறு அருளப்பட்டதோ
முற்றிலும் அதே சொற்களில் இருக்கிறது.
மற்றொரு வகையில் , இன்றைய உலகில் முஸ்லிம்
பெருமக்கள் துர்பாகியவான்களே! இறைவனின் வாக்கான திருக்குரானைத் தம்மிடம் வைத்து
கொண்டிருக்கும் அவர்கள் அவர்கள் அதன் ஆசிகளையும், வரம்பிட முடியாத
அருட்பேருகளையும் இழந்த நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் திருக்குரானை
இறக்கி அருளியதன் நோக்கம்,அதனை அவர்கள் ஓதி உணர்ந்து அதன்படி நடக்க வேண்டும் எனபது
தான். அதை வைத்து, இறைவன் படைத்த மண்ணகத்தில் இறைவனுடைய ஆட்சியை நிலைநாட்ட
வேண்டும் எனபது தான்! அவர்களுக்கு கண்ணியத்தையும் வலிமையையும் கொடுப்பதற்காக அது
வந்திருக்கிறது. மன்னகத்துக்கு அவர்களை உண்மையான இறைவனுடைய கலீபா வாய் ஆக்குவதற்கு
அதுவந்திருக்கிறது. இதற்க்கு வரலாறு சான்று கூறுகிறது. அதன் அறிவுரைகளுக்குத்
தக்கவாறு அவர்கள் செயல்பட்டபோது, அவர்களை அது உலகிற்குத் தலைவர்களையும்
வழிகாட்டிகளையும் உயர்த்திவிட்டது.
ஆனால் இப்போது அது அவர்களிடத்தில் இந்த நிலையில்
இல்லை. அதனை வீட்டில் வைத்து ஜின்களையும் பூதத்தையும் விரட்டுவது, அதிலுள்ள
வசனங்களை எழுதி கழுத்தில் கட்டுவது, கரைத்து குடிப்பது, நற்கூலிக்காக பொருள்
தெரியாமல் ஓதுவது போன்ற செயல்களில் தான் அது இன்று பயன்படுத்தப்படுகிறது. தமது
வாழ்வில் குறுக்கிடும் பிரச்சனைகளுக்கு அவர்கள் வழிகாட்டியாய் அதனைக் கொள்வதில்லை.
“எங்கள் கொள்கை எப்படி இருக்க வேண்டும்; எங்கள்
நடத்தை எவ்வாறு அமைய வேண்டும்; எங்கள் நற்குண,நல்லொழுக்கங்கள் எப்படி இருக்க
வேண்டும்; வியாபாரத் தொடர்புகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்; நட்பிலும்
பகைமையிலும் எந்த சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்; எமக்கும் மற்றவர்களுக்கும்
இருக்கிற கடமைகள் யாவை; அவற்றை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்; எது எங்களுக்கு
சத்தியம்----எது எங்களுக்கு அசத்தியம்; எதை நாங்கள் விட்டுவிட வேண்டும்; எதை
நாங்கள் பின்பற்ற வேண்டும்----எதை நாங்கள் விட்டுவிட வேண்டும்; யாருடன் தொடர்பு
வைத்து கொள்ள வேண்டும்-------------கூடாது; எங்களுக்கு நண்பர் யார்---பகைவர் யார்;
எங்களுக்குக் கண்ணியமும் வெற்றியும் நற்பயனும் எதில் இருக்கின்றன------------
கேவலமும் ஏமாற்றமும் நஷ்டமும் எதில் இருக்கின்றன???” என்றெல்லாம் அவர்கள் அதனிடம்
கேட்பதில்லை.
இந்த பிரச்சனைகளை எல்லாம் திருக்குரானிடம்
கேட்பதை இன்று முஸ்லிம்கள் விட்டு விட்டார்கள். உலகாயவாதி, நாத்திகர்,இணைவைப்பவர்,
இஸ்லாத்தை மறுப்பவர், வழிகெட்டவர், சுயநலம் படைத்தவர், தம்முடைய உள்ளத்திற்குள்ளே
மறந்திருக்கிற ‘சைத்தான்’ ஆகியோர்களிடம் இந்த பிரச்சனைகளைப் பற்றி இன்று
முஸ்லிம்கள் ஆலோசனைகள் கேட்கிறார்கள்; அவர்கள் அளிக்கும் ஆலோசனைப்படியே
நடக்கிறார்கள். எனவே இறைவனை அலட்சியம் செய்து விட்டு மற்றவர்களின் அதிகாரத்திற்கு
உட்பட்டு நடப்பதால் என்ன விளைவு ஏற்பட வேண்டுமோ, அதே விளைவு இன்று அவர்களுக்கு
ஏற்பட்டு விட்டது! இந்தியா, சீனா, ஜாவா, பாலஸ்தீனம், அல்ஜீரியா, மொரகோ ஆகிய எல்ல
நாடுகளிலும் அதே விளைவு தான் இன்று அவர்களுக்கு வஞ்சம் தீர்த்துக்
கொண்டிருக்கிறது....
திருக்குர்ஆன் நன்மைகளின் ஊற்றாகும். எவ்வளவு
நன்மையை அதனிடம் கேட்டாலும் அது உங்களுக்கு கொடுக்கும்.
---------- மௌலானாசையித் அபுல் அஹ்லா மௌதூதி
(ரஹ்)
இஸ்லாமிய
வாழ்வு எனும் புத்தகத்திலிருந்து.
No comments:
Post a Comment