Saturday, 19 January 2013

இந்தியாவும் வல்லரசு தான்...... லண்டன் ஆய்வு தகவல்.




எவ்வளவு கொட்டுனாலும் வாங்கிக்கிறாங்க.... இவங்க பெரிய வல்லரசு யா...! என்பது போல லண்டன் பொருளாதார மேதைகள் மேற்கொண்ட ஆய்வில் 2050 ஆம் ஆண்டு உலகின் வல்லரசு பட்டியலில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடமும் இந்தியா மூன்றாவது இடத்தையும் பெரும் என்று கூறுகிறார்கள். (அப்ப 2020 கனவு தானா என்று கேட்பது புரிகிறது)

நமது பொருளாதார மேதாவி பிரதமர்.மன்மோகன் சிங் இதனைக்கூறி சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார். அமெரிக்காவில் விற்காத வீணான பொருட்களை மன்னிக்கவும் குப்பைகளை கொட்ட சீனா முதல் குப்பை கூடை, இரண்டாவது குப்பை கூடை இந்தியா என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த ஆய்வு. ஆம் 90 பைசா தயாரிப்பு செலவு கொண்ட பெப்சி இங்கு வெறும் 12 ரூபாய் தான். அதனை குடிப்பதால் இந்திய ஆண் மகன் பெண்களை எளிதில் வசீகரிக்க முடியும், இந்திய பெண்கள் தன் அந்தஸ்தை மற்றவர்கள் முன்னிலையில் அதிக மாக்க முடியும். ஆம் தன் வீட்டில் பசியாற குடிப்பது கஞ்சியாக இருப்பினும் கல்லூரியில் கையில் பிடிப்பது coco cola ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறது நம் மனம்.

சமீப காலங்களாக அழகிப்போட்டியில் முதலிடம் பிடித்த நமது வீர மங்கைகள் திரும்பவும் மன்னியுங்கள் அழகு பதுமைகள் முதலில் செய்வது தன் அழகுக்கு காரணம் இந்த ...................லீ தான், தன் தலைமுடி கருமைக்கு காரணம் இந்த ...............பூ தான் என பேட்டியும், விளம்பரமும் கொடுப்பார்கள்(அவங்க பாட்டி அங்க திட்டிட்டு இருப்பாங்க). யன்னா அழகு அந்தப்புள்ள.....

இது போல தான் இந்த லண்டன் ஆய்வும், வால்மார்ட் போன்ற கம்பனிகளுக்கு நாம் சாதா கம்பளம் இல்ல சிவப்பு கம்பளம் விரிக்கணும் அல்லவா... அதன் மூலம் இன்னும் பல குப்பைகளை விற்க முடியுமல்லவா அதற்கு தான் இந்த ஆய்வு என்கிறது என் குட்டி மனசு.... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இந்தியா குப்பைக் கூடை அல்ல என்பதைக் காட்ட உங்கள் பங்கீடு என்ன? கமென்ட் பண்ணுங்க...... 

No comments:

Post a Comment