Tuesday, 15 January 2013

படைப்பின் நுட்பம்......ship.


கப்பல்.....................................


நம் அனைவருக்கும் கப்பலில் செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் சிறிதளவு பயமும் அதனுடன் கலந்தே காணப்படும். ஏனெனில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவ்வளவு தான்!
மிகப்பெரிய சமுத்திரத்தின் மேலே அணைத்து மக்களையும் ஏற்றிக்கொண்டு, சரக்குகளையும், வாணிபப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு பயணிக்கும் கப்பலைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அதிலும் போர்க்கப்பல், சுற்றுலாக்கப்பல் எனப் பல வகைகள்.

உலகில் பரப்பில் அதிகமான சதவீதம் சூழப்பட்டுள்ள கடலில் எத்தனை, எத்தனை உயிர் வளங்கள், கனிம வளங்கள், அழகான வண்ண மீன்கள் என அனைத்தும் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்பவைகளாகவே இறைவன் படைத்துள்ளான்.

இந்த பறந்து விரிந்த கடலைப் பார்க்கும் போது கடற்கரையில் இருக்கும் நமக்கு உடல் சிலிர்க்க வேண்டாமா? இத்தனை வளங்களையும் மனிதனுக்காக உலகில் படைத்து தந்த இறைவன் மனிதனிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன? என்பதை குறித்து சிந்தியுங்கள் இறைவனின் புகழைப் பரப்புங்கள்!

“........அவனே (உங்களுக்காக) கடலை வசப்படுத்தி தந்துள்ளான். அதிலிருந்து நீங்கள் புத்தம்புதிய மாமிசத்தை புசிக்க வேண்டும் என்பதற்காகவும், நீங்கள் அணிகின்ற அழகுப் பொருட்களை அதிலிருந்து வெளிக்கொணர்ந்திட வேண்டும் என்பதற்காகவும்! மேலும், கப்பல் கடலைப் பிளந்துக் கொண்டு செல்வதையும். நீர் காண்கின்றீர். மேலும், உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்துக் கூடியவர்களாய் நீங்கள் திகழ்வதற்கு ஆகவுமே இவையெல்லாம் இருக்கின்றன.” (திருக்குர்ஆன்; 16:14)

Friday, 11 January 2013

created by sceince


யாவும் இயற்கை !
எல்லாம் தற்செயல் !



எல்லையற்ற வான வெளியில் அங்கும் இங்குமாக இறைந்து கிடந்த பலவகையான இயற்கை மூல அணுக்கள் திடீரென்று ஒரு நேரத்தில் “தற்செயலாக” ஒன்றாக இணைந்து கொண்டன. அப்படி இணைந்தவுடன் அது “தானாகவே” குழம்பாக மாறிக்கொண்டன அவை சூரியனாக இன்னும் பல கோளங்களாக மாறி எத எதையோ சுற்றி வந்தன பிறகு அதில் இருந்து பல துண்டுகள் பிரிந்து வந்தன அதில் ஒன்று தான் நாம் வாழும் உலகம் அதில் இருந்து இன்னொரு துண்டு பிரிந்து போனது அது தான் நிலா! ஆம் மனிதன் வெற்றிக்கொடி நாட்டி வந்திருக்கின்றானே ஒளிப் பிரதிபலிக்கின்ற அதே சந்திரன் தான். எல்லாம் தற்செயல் தான்................................................................................


பிரிந்து போனதே அந்த பூமி.....! பாவம் அதுவும் எவ்வளவு காலம் தான் கொதித்து கொண்டு இருக்கும் “தற்செயலாகவே” அது குளிர்ந்தது. அது மட்டுமா திடீரென்று “தானாக” பள்ளங்களும் மேடுகளும் உருவாகின. பிறகு “தற்செயலாக”பிராண வாயுவும் (ஆக்சிஜன்) நீரக வாயுவும் (ஹைட்ரஜன்) சேர்ந்து நீராக மாறியது அதுவும் கொஞ்சம் நஞ்சம் இல்லை நண்பர்களே நாம் இன்று பார்கின்ற கடல்கள்..... பெரும் சமுத்திரங்கள் எல்லாம் அப்படி உருவாகியது தான்.... அதில் உப்பும் (உப்பு எப்டி உருவாச்சு நு கேக்காதீங்க பா..அதுவும் தானாதான்) தானாக கலந்து விட்டது இல்லை என்றால் கற்பனை செய்து பாருங்கள் உப்பில்லாத சாப்பாடு தான் நாம் சாப்பிட்டு இருக்க வேண்டும்.அப்படி உருவான நீரும் கூட சரியாக அந்த பள்ளங்கள் நிறைந்த உடன் நின்று விட்டன (சத்தியமா தான தான்). இப்பவும் வான்வெளியில் அந்த வாயுக்கள் உள்ளன ஆனால் அப்படி எல்லாம் உருவாகாது.....
                           தொடரும்.....
இப்படிக்கு
அறிவியல்
பகுத்தறிவு தீர்பளிக்கிறது எனும் புத்தகத்தில் இருந்து சில மாற்றங்களோடு.

Wednesday, 9 January 2013

PLANT EVOLUTION ..............

இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உங்கள் மீது நிலவட்டுமாக.....


உலகம் நெருப்பாக இருந்து பிறகு குளிர்ந்து, மழை அதிக காலத்துக்கு பெய்து கடல்கள் நிரம்பி பிறகு சில அமிலங்கள் மற்றும் பல தனிமங்கள் சேர்ந்து நுன்னியுயிரிகலான அமீபா, பக்டீரியா உருவாகின பிறகு அப்படியே காலத்திற்கு ஏற்ப மாறி மாறி பல உயிரினங்கள் தாண்டி மனிதன் வந்தான் இதுதான் டார்வின் மற்றும் அவரைச் சார்ந்த விஞ்ஞானிகளின் கருத்தும் கடவுள் இல்லை என்றும் குறிப்பாக இஸ்லாமை எதிர்க்கும் மனிதர்களின் கருத்து.



ஆனால் ஏன் மனிதன் வித விதமாக சாப்பிடும் உயிரான தாவரங்களைப் பற்றிய EVOLUTION THEORY தெளிவாக இல்லை.
உதாரணத்திற்கு ஒரே விதமான வெப்பம், சுற்றுச் சூழல் கொண்ட காடுகளில் எப்படி ஆயிரக்கணக்கான வித விதமான மரங்கள், செடிகள் வளர்ந்தன. அதில் பல விதமான பழங்கள் உருவாகின,அவற்றில் பல சுவைகள் கொண்ட பழங்கள் உருவாகின........? அவை எப்படி தகவமைப்பினை மாற்றி கொண்டு வாழ்வதற்காக மாறின என்று கூற முடியுமா......? அதுவும் ஒரு உயிரினம் தான் ஆனால் விலங்குகளுக்கு நீங்கள் கதை அளந்தது இதற்கு அளக்க முடியுமா? கேள்விதான்,
 விடை தெரியாது அவர்களுக்கு ஏனெனில் அவர்களின் கருத்து தவறானது.

இதோ இறைவனே கேட்கின்றான் கேள்வியை.................பதில் இருக்கிறதா?

“பூமியை அவன் எல்லாப் படைப்புகளுக்காவும் அமைத்தான்.அதில் விதவிதமான சுவைமிகு கனிகள் ஏராளமாய் இருக்கின்றன. பேரித்த மரங்களும் இருக்கின்றன. அவற்றின் பழங்கள் பாலைகளால் மூடப்பட்டு இருக்கின்றன.விதவிதமான தானியங்கள் உள்ளன. அவற்றில் உமியும் உண்டு; மணியும் உண்டு. ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த அருட்கொடைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?”
 (திருக்குர்ஆன்:55;10-13)

பதில் இருக்கிறதா.............................................................................................................?